tamilnadu

img

ஐடிபிஐ வங்கிக்கு அரசின் 9,300 கோடி நிவாரணம்!

புதுதில்லி:
தொடர் சரிவைக் கண்டு வரும் ஐடிபிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மறுமுதலீடாக அரசு மற்றும் எல்.ஐ.சி நிறுவனம் 9,300 கோடி ரூபாயை அளிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது.1964ஆம் ஆண்டு ஐடிபிஐ வங்கி (இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி) தொழில் வளர்ச்சிக்காக இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும்.சமீப வருடங்களில் வராக் கடன் பிரச்சனையில் சிக்கிய ஐடிபிஐ வங்கி கடும் நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. இதனால் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை எல்ஐசி வாங்கவுள்ளதாக 2018 ஜூன் மாதம் அறிவித்திருந்தது.சமீபத்தில் ஐடிபிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாகின. இதில் நிகர வட்டி வருவாய் குறைந்ததையடுத்து, நிகர நஷ்டம் அதிகரித்துள்ளது எனவும், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3800 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் ஐடிபிஐ தெரிவித்திருந்தது.இந்நிலையில், செப்டம்பர் 3 செவ்வாயன்று அரசு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலிருந்து (எல்ஐசி) 9,300 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கிக்கு மறு மூலதனமாக உட்செலுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் பங்காக 4,577 கோடியும், எல்ஐசி மூலமாக 4,743 கோடியும் வழங்கப்படவுள்ளது.இந்த முடிவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்த போது, “ஐடிபிஐ வங்கியின் மறு மூலதனத்தை, அரசு மற்றும் எல்ஐசி (ஆயுள் காப்பீட்டுக் கழகம்) மூலம் நிதியுதவி அளிக்க அமைச்சரவை அனுமதித்துள்ளது. இது ஐடிபிஐ வளர்ச்சிக்கும், எல்ஐசி வளர்ச்சிக்கும் உதவக்கூடும். 

;